நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம்

மகளிர்இ சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு



ஆசிய அபிவிருத்தி வங்கி செயற்திட்டம்

ஆசிய அபிவிருத்தி வங்கி கருத்திட்டம்  (2022-2024)

அங்கீகரிக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டுத் தொகை : அமெரிக்க டொலர் - 969,176.30 

இந்த கருத்திட்டம் பெண்கள், சிறுவர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழுள்ள சில நிறுவனங்கள் மூலம் அமுல்படுத்தப்படுகிறது. ஆசிய அபிவிருத்தி வங்கியால் நிதி வழங்கப்படும் உணவு மற்றும் போசாக்கு கருத்திட்டம் ஊடாக நன்நடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவைகள் திணைக்களத்தின் பாதுகாப்பில் இருக்கும் சிறுவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, இலங்கையில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகக்கூடிய சிறுவர்களின் போசாக்கு நிலை மற்றும் உணவு பாதுகாப்பை மேம்படுத்துதலை விசேடமாக கொண்ட சில பிரதான குறிக்கோள்கள் அடைய எதிர்பார்க்கப்படுகிறது. 
அந்த குறிக்கோள்களில், 

1 .யுனுடீ-பு-01 - சலுகை பெறாத பாதுகாப்பு இல்லங்களில் உள்ள பிள்ளைகளின் அடிப்படைத் தேவைகளுக்கான உதவிகள் 
2 .யுனுடீ-பு-03 -  பாதுகாப்பான மற்றும் பராமரிப்பு இல்லங்களின் ஆளணியினர் மற்றும் பிரதேச அரச அலுவலர்களுக்கான பயிற்சி 
3 .யுனுடீ-பு-04 - அச்சுறுத்தலுக்கு உள்ளாகக்கூடிய சிறுவர்கள், பெண்கள் மற்றும் நபர்களுக்கான பாதுகாப்பு திட்டம் ஃ வாழ்வாதார அபிவிருத்தி திட்டத்தை விருத்தி செய்தல். 
4 .யுனுடீ-பு-05 -  நிறுவன பாதுகாப்பில் உள்ள அச்சுறுத்தல் மட்டத்தில் இருக்கும் பிள்ளைகளின் அடிப்படை தேவைகளுக்கான உதவிகள் 
5. யுனுடீ-பு-06 -  பாதுகாப்பு இல்லங்களில் உள்ளவர்கள் அடங்கலாக அச்சுறுத்தலுடைய இளமைப் பருவத்தினருக்கான வாழ்வாதார அபிவிருத்தி உதவிகள் 

ஒட்;டுமொத்தமாக ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதி வழங்கப்படும் உணவு மற்றும் போசாக்கு தொடர்பான கருத்திட்டம் இலங்கையில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகக்கூடிய பிள்ளைகளின் அடிப்படைத் தேவைகள், பாதுகாப்பு மற்றும் அவர்களது உடல், உள மற்றும் கல்வித் தேவைகளுக்காக உதவி வழங்குவதன் மூலம் அவர்களது வாழ்க்கையை மேம்படுத்தலை குறிக்கோளாக கொண்ட விசேட கருத்திட்டம் ஆகும்.   
 




எம்முடன் இணைந்துகொள்ளுங்கள்

எம்மைத் தொடர்புகொள்ள

  • நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம்,
  • 3 ஆம் மாடி, செத்சிறிபாய, இரண்டாம் கட்டம்,
  • பத்தரமுல்லை.
  • +94 11 2186 062/ 11 3082 483
  • +94 11 218 7285
  • pcc@sltnet.lk