நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம்

மகளிர்இ சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு



 ஐக்கிய நாடுகளின் சிறுவர்கள் உரிமைகள் சமவாயம்

மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் பிள்ளைகளின் நலன்புரி மற்றும் பாதுகாப்புக்கான சமவாயம் தயாரிக்கப்பட வேண்டிய தேவை அடையாளம் காணப்பட்டது. அதற்கான அடிப்படை செயற்பாடாக ஐக்கிய நாடுகள் அமைப்பால் 1979 ஆண்டு சிறுவர் உரிமைகள் ஆண்டாக பிரகடனம் செய்யப்பட்டது. அதேவேளை மனித உரிமைகள் ஆiணைக்குழுவின் தலைமை மற்றும் வழிகாட்டலிலுடன் ஐக்கிய நாடுகள் அமைப்புடன் ஏனைய அரச சார்பற்ற அமைப்புகள் ஒருங்கிணைந்து சிறுவர் உரிமைகள் சமவாயத்தை தயாரித்து, 1989 நவம்பர் 20 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் அமைப்பின் 44ஃ5 இலக்க கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டு, பிரகடனம் செய்யப்பட்டது. பிள்ளைகளின் அபிவிருத்தி, அவர்களது முன்னேற்றம் மற்றும் நல்லிருப்பு தொடர்பாக கவனமெடுக்கும் அரசுகள் இந்த உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டன. தற்போது சர்வதேச உடன்படிக்கைகளில் உலக சிறுவர் சமவாயம் ஆகக்கூடிய நாடுகள் கையொப்பமிட்டுள்ள உடன்படிக்கை ஆகும்.   

உலக சிறுவர் சமவாயத்தில் உள்ள பிரிவுகள் 

18 வயதுக்கு குறைந்த அனைவரும் சிறுவர்கள் எனவும், இந்த சமவாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து உரிமைகளும் அவர்களுக்கு இருத்தல் வேண்டும் எனவும், உலக சிறுவர் உரிமைகள் சமவாயத்தின் முதலாவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 54 பிரிவுகளைக் கொண்ட இந்த ஆவணம் 4 அடிப்படை கோட்பாடுகளுக்கு அமைய தயாரிக்கப்பட்டுள்ளது : 

பிள்ளைகளை பாரபட்சமாக நடத்தாதிருத்தல்

•    பிள்ளைகளின் உன்னதமான நல்லிருப்பு
•    உயிர்வாழுதல் மற்றும் அபிவிருத்திக்கான உரிமை
•    சிறுவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்தல்

இந்த கோட்பாடுகளில் வெளிப்படுத்தப்படும் பிள்ளைகளின் உரிமைகள் 44 பிரிவின் மூலம் நேரடியாக உயிர்வாழுதல், பாதுகாப்பு, அபிவிருத்தி மற்றும் பங்கேற்பு ஆகிய துறைகள் ஊடாக பாதுகாப்பதற்குரிய விடயங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஏனைய பிரிவுகளில் சிறுவர் உரிமைகள் சமவாயம் தொடர்பில் அரசு என்ற வகையில் செயற்பட வேண்டிய முறை தொடர்பாக விபரிக்கப்படுகிறது. 

அதற்கு மேலதிகமாக சிறுவர் உரிமைகளுக்கு இணையாக ஐக்கிய நாடுகள் அமைப்பினால் 3 விருப்பத்தெரிவு ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் போர் மோதல்களால் பாதிக்கப்பட்ட பிள்ளைகள் தொடர்பிலான விருப்பத்தெரிவு பிரகடனம் (ழுpவழையெட Pசழவழஉழட வழ வாந ருNஊசுஊ ழn ஐnஎழடஎநஅநவெ ழக ஊhடைனசநn in யுசஅநன ஊழகெடiஉவ)  சிறுவர் வர்த்தகம், சிறுவர் பாலியல் தொழில் மற்றும் சிறுவர் ஆபாசப் படங்களில் சிறுவர்களை ஈடுபடுத்துதல் (ழுpவழையெட Pசழவழஉழட வழ வாந ருNஊசுஊ ழn ளுயடநள ழக ஊhடைனசநnஇ ஊhடைன Pசழளவவைரவழைn யனெ உhடைன Pழசழெபசயிhல)  ஆகிய விருப்பத்தெரிவு பிரகடனங்களில் இலங்கை கையெழுத்திட்டு, அமுல்படுத்தும் கடப்பாட்டைக் கொண்டுள்ளது. 

இலங்கையில் சிறுவர் உரிமைகள் சமவாயத்தை அமுல்படுத்துதல் 

1990 ஜனவரி 26 ஆம் திகதி இலங்கை உலக சிறுவர் உரிமைகள் சமவாயத்தில் கையொப்பமிட்டு, 1991 ஜூலை 12 ஆம் திகதி ஏற்று அங்கீகரிக்கப்பட்டது. அத்துடன் உலக சிறுவர் உரிமைகள் தொடர்பான சமவாயத்தை ஏற்றுக்கொண்டதுடன், இலங்கை அரசினால் 1992 ஆம் அண்டில் சிறுவர் உரிமைகள் தொடர்பான சமவாயம் வெளியிடப்பட்டது. அத்துடன் போர் மோதல்களால் பாதிக்கப்பட்ட பிள்ளைகள் தொடர்பான விருப்பத்தெரிவு பிரகடனம் 2000 ஆகஸ்ட் 21 ஆம் திகதி கையொப்பமிடப்பட்டு, 2000 செப்ரெம்பர் 8 ஆம் திகதி உறுதிப்படுத்தப்பட்டது. சிறுவர் வர்த்தகம், சிறுவர் பாலியல் தொழில் மற்றும் சிறுவர் ஆபாசப் படங்களில் சிறுவர்களை ஈடுபடுத்துதல் (ழுpவழையெட Pசழவழஉழட வழ வாந ருNஊசுஊ ழn ளுயடநள ழக ஊhடைனசநnஇ ஊhடைன Pசழளவவைரவழைn யனெ உhடைன Pழசழெபசயிhல) எனும் விருப்பத்தெரிவு பிரகடனம் 2002 மே 21 ஆம் திகதி கையொப்பமிடப்பட்டு, 2002 செப்ரெம்பர் 22 ஆம் திகதி உறுதிப்படுத்தப்பட்டது.


இந்த சமவாயங்கள் அனைத்தையும் அமுல்படுத்தம் விடயத்தில் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு முன்னோடியாக செயற்படுகிறது. அந்த அமைச்சின் கீழ் நிறுவப்பட்டுள்ள தேசிய நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவைகள் திணைக்களத்தின் சேவைகளை புதிய பாதையில் பயணித்து சிறுவர் உரிமைகளை அமுல்படுத்தும் நிறுவனமாக மாறியுள்ளது. அதற்கமைய அந்த திணைக்களத்தினால் உலக சிறுவர் சமவாயத்தை அமுல்படுத்துதலை நோக்கமாக கொண்டு சிறுவர் உரிமைகள் மேம்படுத்தல் அலுவலர் எனும் பெயரிலான பதவி உரவாக்கப்பட்டு பட்டதாரிகள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டார்கள். அவ்வாறு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அலுவலர்கள் அனைத்து பிரதேச செயலகங்களுக்கும் இணைப்பு செய்யப்பட்டு பிரதேச ரீதியில் பிள்ளைகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கு தேவையான பின்னணியும், அவர்களது அபிவிருத்திக்கு தேவையான வசதிகளையும் வழங்குவதற்காக அந்த சேவை உருவாக்கப்பட்டுள்ளது. 

மேலதிக வாசிப்பு :
•    ஐக்கிய நாடுகளின் சிறுவர் உரிமைகள் சமவாயம்
•    சிறுவர் உரிமைகள் சமவாயம்
•    போர் மோதல்களால் பாதிக்கப்பட்ட பிள்ளைகள் தொடர்பிலான விருப்பத்தெரிவு பிரகடனம்
•    சிறுவர் வர்த்தகம், சிறுவர் பாலியல் தொழில் மற்றும் சிறுவர் ஆபாசப் படங்களில் சிறுவர்களை ஈடுபடுத்துதல்   




எம்முடன் இணைந்துகொள்ளுங்கள்

எம்மைத் தொடர்புகொள்ள

  • நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம்,
  • 3 ஆம் மாடி, செத்சிறிபாய, இரண்டாம் கட்டம்,
  • பத்தரமுல்லை.
  • +94 11 2186 062/ 11 3082 483
  • +94 11 218 7285
  • pcc@sltnet.lk