பிள்ளைகளுக்கு ஒத்தாசை, உதவிகளை கோரும் பல கோரிக்கைகள் நன்நடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவைகள் திணைக்களத்துக்கு கிடைக்கின்றன. கிடைக்கும் கோரிக்கைகளில் பெரும்பாலானவை அந்த பிள்ளைகளின் குடும்பங்களில் உள்ள பொருளாதார நெருக்கடிகள் காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் என்பது தெளிவாகிறது. எனவே பாதுகாப்பான குடும்பத்தில் பிள்ளை வாழ்வதற்கான உரிமையை உறுதிப்படுத்தி, பிள்ளையின் ஒட்டுமொத்த அபிவிருத்தியை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த அத்வெல அனுசரணை பெற்றோர் திட்டம் அமுல்படுத்தப்படுகிறது. அதன்போது அனுசரணையாளர்கள் மற்றும் உதவியை எதிர்பார்க்கும் பிள்ளைகள் ஃ குடும்பங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு நன்நடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும். இந்த செயற்திட்டத்தின் மூலம் பிள்ளைகள் தமது கல்வி, போசாக்கு, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகிய பிரதான தேவைப்பாடுளுக்கான நிதிவார் உதவிகள், பொருள்சார் உதவிகள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கான தலையீடு மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்துக்காக பிரதேச செயலகங்களில் பணியாற்றும் சிறுவர் உரிமை மேம்படுத்தல் அலுவலர்கள் மற்றும் சிறுவர் உரிமைகள் மேம்படுத்தல் உதவி அலுவலர்களால் பிள்ளைகள் முன்னிலைப்படுத்தப்படுவார்கள்.
இந்த செயற்திட்டத்துக்காக உதவி எதிர்பார்க்கும் பிள்ளைகள் மற்றும் அனுசரணையாளர்களின் தகவல்களை உள்ளடக்குவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள கூகிள் விண்ணப்ப படிவத்தை பின்வரும் இணைப்பின் ஊடாக தரவிறக்கம் செய்யுங்கள்.
• அனுசரணையாளர்களின் தரவுகளை உள்ளடக்குவதற்கான விண்ணப்ப படிவம்
• உதவி எதிர்பார்க்கும் பிள்ளைகளின் தரவுகளை உள்ளடக்கும் விண்ணப்ப படிவம்