நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம்

மகளிர்இ சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு



சிறுவர் இல்லங்களை மறுசீரமைத்தல்

நாட்டின் 9 மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் மத்திய அரசின் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்தினால் அநாதைகள், அநாதரவான, கைவிடப்பட்ட சிறுவர்களின் பாதுகாப்பு, உளவியல் அபிவிருத்தியை நல்லநிலையில் பேணிவவதற்கான ஏற்பாடுகள் பெற்றுக் கொடுக்கப்படுகின்றன. சிறுவர் இல்லங்களை தரமானதாக பேணிவருவதன் மூலம் மேற்படி சூழலில் வளரும் பிள்ளைகள் தரமான மற்றும் பண்புமிக்கதொரு அபிவிருத்தியை அடைந்துகொள்ள முடியும். இதற்காக தொடர்ச்சியாக மாகாண நன்னடத்தை அலுவலர்களிடமிருந்து கிடைக்கின்ற கோரிக்கைகளை முன்னுரிமைப்படுத்தி தேவையான மேம்படுத்தல்களுக்கு ஏற்பாடுகளைப் பெற்றுக் கொடுப்பதும் தொடர்ச்சியான கண்காணிப்பை மேற்கொள்வதும் இடம்பெறுகின்றது.

குறிப்பாக சிறுவர்களுக்குத் தேவையான பாதுகாப்புக்காக வலை வேலி மறப்புகள், நுழைவாயில் கதவுகள், மதில்கள், பாதுகாப்புக் கெமரா போன்றவற்றை பொருத்தல் மற்றும் அவர்களின் இல்லங்களுக்கு மலசலகூடம், கழிவறை மற்றும் நீர்த்தாங்கிகளை நிர்மாணிப்பதன் மூலம் அடிப்படைத் தேவைகளை பெற்றுக் கொடுப்பதற்குமாக ஒவ்வொரு வருடமும் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.

9 நன்னடத்தை மாகாணங்களிலும் இல்லங்களை மேம்படுத்துவதற்கு மேலதிகமாக அரசாங்க நன்னடத்தைத் திணைக்களத்தின் கண்காணிப்பின் கீழ் பேணிவருகின்ற சிறுவர் பயிற்சி மற்றும் ஆலோசனைச் சேவைகள் நிலையத்தின் பௌதீக வளங்கள் வருடாந்தம் மேம்படுத்தப்படுவதும் இடம்பெறுகின்றது.

மேலும் இந்த இல்லங்களில் 18 வயது பூர்த்தியடைகின்ற சிறுவர்களின் திறமைகளை மேம்படுத்தத் தேவையான உதவியைப் பெற்றுக் கொடுக்கவும் திணைக்களம் நடவடிக்கை மேற்கொள்கின்றது. இதன் கீழ் தலைமைத்துவ பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள், ரசனை நிகழ்ச்சித்திட்டங்கள், சிறுவர் முகாம், சுற்றுப்பயணங்கள், விளையாட்டுப் போட்டிகள், சமய நிகழ்ச்சிகள், சிரமதானம் போன்றவனவும், சிறுவர்களின் தொழில்சார் திறமைகளை மேம்படுத்துவது தொடர்பில் கைப்பணி ஆக்கங்கள்,வர்ணம்தீட்டல், தையல், பேக்கரி உணவு சமைக்கும் வேலைகள், பைகள் மற்றும் பாதணி தைத்தல் போன்ற கைத்தொழில்களுக்கான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

சிறுவர் இல்லங்களைக் கண்காணிப்புச் செய்வதன் கீழ் அவ்வவ் மாகாணங்களுக்குத் தேவையான உபகரணங்களைப் பெற்றுக் கொடுத்தல், அலுவலர்கள் குழுக்களாக சிறுவர் இல்லங்களுக்குச் சென்று அவற்றின் முன்னேற்றத்தை மேம்படுத்துவது தொடர்பிலான சிக்கல்களை இனங்காணல் மற்றும் சிபாரிசுகளை வழங்குவதும் மேற்கொள்ளப்படுகின்றது. மேலும் சிறுவர்களின் உச்சளவான நலனுக்காக சிறுவர்களுடன் வேலை செய்கின்ற மனிதவளத்தை தொடர்ச்சியாக பயிற்றுவிக்க வேண்டும் என்பதனால் பதவியணிக்கான பயிற்சிச் செயலமர்வுகளை நடாத்துவம் மேற்கொள்ளப்படுகின்றது.

இதற்கமைய, நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம் சிறுவர் இல்லங்களின் பௌதீக மற்றும் மனிதவளத்தை மேம்படுத்துவதற்காக வருடாந்தம் சுமார் 1.5 மில்லியன் ரூபாவை திட்டமிட்டு செலவிடுகின்றது.

இதற்கு மேலதிகமாக அரசசார்பற்ற அமைப்புக்களின் நிதி அனுசரணையின் கீழ் சிறுவர் இல்லங்களை அபிவிருத்தி செய்வது தொடர்பிலான பல்வேறு கருத்திட்டங்களும் அமுல்படுத்தப்படுகின்றன.




எம்முடன் இணைந்துகொள்ளுங்கள்

எம்மைத் தொடர்புகொள்ள

  • நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம்,
  • 3 ஆம் மாடி, செத்சிறிபாய, இரண்டாம் கட்டம்,
  • பத்தரமுல்லை.
  • +94 11 2186 062/ 11 3082 483
  • +94 11 218 7285
  • pcc@sltnet.lk