நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம்

மகளிர்இ சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு



வெளிநாட்டுத் தத்தெடுத்தல்

இலங்கைச் பிரசைகள் அல்லாத இலங்கையில் வசிக்கின்ற அல்லது இலங்கையில் நிரந்தர வதிவிடமற்றவர்கள் வெளிநாட்டு விண்ணப்பதாரர்களாகக் கருதப்படுவார்கள். 1941 இன் 24 ஆம் இலக்க தத்தெடுத்தல் கட்டளைச் சட்டத்தின் கீழ் (1992 இன் 15 ஆம் இலக்க திருத்தச்) வெளிநாடுகளில் வசிக்கின்ற விண்ணப்பதாரர்கள் தாம் வசிக்கின்ற நாடுகளின் சுற்றாடல் அறிக்கை, பொலிஸ் அறிக்கை உட்பட ஏனைய ஆவணங்களை  இலங்கைத் தூதரகம் ஊடாக நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கின்றனர்..

அவ்வாறே சர்வதேச ரீதியாக சிறுவர்களை தத்தெடுக்கும் போது ஏற்புடையதாகின்ற ஹேக் பிரகடனத்தின் சட்டங்களையும் பின்பற்றல் வேண்டும். யாராயினுமொரு பிள்ளையைத் தத்தெடுப்பதற்கு உள்நாட்டு விண்ணப்பதாரர்கள் முன்வராத பட்சத்தில் தத்தெடுத்தல் கட்டளைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள சிறுவர் இல்லமொன்றில் வசிக்கின்ற அவ்வாறான ஒரு பிள்ளையை வெளிநாட்டு விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கிக் கொடுக்கும் ஆற்றல் இருப்பது நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் ஆணையாளருக்கு மாத்திரமாகும். எந்தவொரு வெளிநாட்டு விண்ணப்பதாரரும் ஒரு பிள்ளையை தெரிவு செய்துகொள்வதற்கான ஆற்றலைப் பெறுவதில்லை. தத்தெடுத்தல் தொடர்பான சகல நடவடிக்கைகளும் அவர்கள் வசிக்கின்ற நாடுகளிலுள்ள அரச நிறுவனங்கள் மற்றும் இந்நாட்டின் ஹேக் பிரகடனத்திற்கு அமைய மத்திய அதிகார நிறுவனமான நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்திற்கு இடைமே மேற்கொள்ளப்படும்.

வெளிநாட்டுத் தத்தெடுத்தல் தொடர்பான வழிகாட்டல்கள் மற்றும் இணைப்புக்கள் பின்வருமாறாகும்.

 




எம்முடன் இணைந்துகொள்ளுங்கள்

எம்மைத் தொடர்புகொள்ள

  • நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம்,
  • 3 ஆம் மாடி, செத்சிறிபாய, இரண்டாம் கட்டம்,
  • பத்தரமுல்லை.
  • +94 11 2186 062/ 11 3082 483
  • +94 11 218 7285
  • pcc@sltnet.lk