நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம்

மகளிர்இ சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு



தேசிய சிறுவர் ஆலோசனை மற்றும் பயிற்சி நிலையம்

 

நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்துடன் இணைந்ததாக தாபிக்கப்பட்டுள்ள தேசிய பயிற்சி மற்றும் ஆலோசனை நிலையமானது துஷ்பிரயோக நிலைமைக்கு ஆளாவதனால் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள சிறுமியருக்கு ஆலோசனைச் சேவைகளைப் பெற்றுக் கொடுத்து அவர்களை சமூகமயப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கத்துடன் தாபிக்கப்பட்டுள்ளது. 6 மாத காலப்பகுதிக்கு ஆலோசனைச் சேவை அவசியமென்று இனங்காணப்படுகின்ற சிறுவர்கள் மாகாண நன்னடத்தை ஆணையாளர்கள் மற்றும் சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு அலுவலர்களினால் இந்த நிறுவனத்திற்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர்.

இந்தக் காலப்பகுதிக்குள் சிறுவர்களுக்கு வதிவிட சிகிச்சையளிக்கப்படுவதுடன், ஆளுமை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் தொழில் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களும் நடாத்தப்படுகின்றன. சகல சிகிச்சைகளையும் பூர்த்தி செய்தவுடன் சிறுவர்களை சமூகமயப்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன், சமூகமயப்படுத்த முடியாத சட்டரீதியான சிக்கல் உள்ள சிறுவர்களை மீண்டும் நன்னடத்தை அலுவலர்களின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படுகின்றனர். 

இந்த நிறுவனத்தின் நிருவாகமானது, நன்னடத்தை ஆணையாளரின் கண்காணிப்பின் கீழ் நிலையப்பொறுப்பு சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு அலுலவர் ஒருவரினால் மேற்கொள்ளப்படுகின்றது. ஆலோசனை அலுவலர்கள் மற்றும் தொழில்சார் திறன் அபிவிருத்தி அலுவர்களின் சேவையும் இந்த நிறுவனத்திற்குக் கிடைப்பதுடன், ஒருசில சந்தர்ப்பங்களில் சிறுவர்களை தொழில்வாய்ப்புக்களில்  ஈடுபடுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

முகவரி

நிலையப்பொறுப்பு அலுவலர்

தேசிய சிறுவர் ஆலோசனை மற்றும் பயிற்சி நிலையம்

கல்கனுவ வீதி,

கொரகான

கொரகான

T.P.: 038 2297353




எம்முடன் இணைந்துகொள்ளுங்கள்

எம்மைத் தொடர்புகொள்ள

  • நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம்,
  • 3 ஆம் மாடி, செத்சிறிபாய, இரண்டாம் கட்டம்,
  • பத்தரமுல்லை.
  • +94 11 2186 062/ 11 3082 483
  • +94 11 218 7285
  • pcc@sltnet.lk