நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம்

மகளிர்இ சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சுயுனிசெவ் கருத்திட்டம்

யுனிசெவ் இலங்கை நிறுவனத்துடன் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம் பல வருடகாலமாக சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான விசேட நிகழ்ச்சித்திட்டங்கள் பலவற்றை அமுல்படுத்தி வருகின்றது. வருடாந்தம் சமர்ப்பிக்கப்படுகின்ற கருத்திட்டப் பிரேரணைகளின் மூலம் அமுல்படுத்தப்படுகின்ற இந்த நிகழ்ச்சித்திட்டங்கள் சிறுவர் உரிமைகள் அலுவலர்களின் திறன் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் கொள்கைகள் மற்றும் வழிகாட்டல்களைத் தயார் செய்தல் போன்ற தொழில்நுட்ப அம்சங்களை நோக்கமாகக் கொண்டுள்ளன. அதற்கமைய பின்வரும் நிகழ்ச்சித்திட்டங்கள் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளன:

  • சம்பவ முகாமைத்துவ முறையில்களை அறிமுகம் செய்தல் மற்றும் சிறுவர் காப்புறுதித் துறைதொடர்பில் சிறுவர்களை பயிற்றுவித்தல்.
  • சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு அலுவலர்களுக்கு சிறுவர் பாதுகாப்பு டிப்ளோமா பாடநெறியை கற்பதற்கு அனுசரணை வழங்குதல்.
  • இல்லமயப்படுத்தப்பட்டுள்ள சிறுவர்கள் தொடர்பில் காணப்படுகின்ற சிக்கல்கள் சம்பந்தமாக ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல்.
  • சிறுவர் இல்லங்களுக்கான தரவுக் கட்டமைப்புக்குத் தேவையான பௌதீக வளங்களைக் கொண்ட உட்கட்டமைப்பு வசதிகளைப் பெற்றுக் கொடுத்தல்.

2017/18 ஆம் ஆண்டுக்கான செயற்றிட்டம்:
எம்முடன் இணைந்துகொள்ளுங்கள்

எம்மைத் தொடர்புகொள்ள

  • நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம்,
  • 3 ஆம் மாடி, செத்சிறிபாய, இரண்டாம் கட்டம்,
  • பத்தரமுல்லை.
  • +94 11 2186 062/ 11 3082 483
  • +94 11 218 7285
  • pcc@sltnet.lk