நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம்

மகளிர்இ சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு



உதவி நிகழ்ச்சித்திட்டங்கள்

1. செவண சரண பெற்றோர் பாதுகாவலர் திட்டம்

இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் பொருளாதார அசௌகரியங்களுக்கு மத்தியில் கல்வி பெறுகின்ற சிறுவர்களுக்கு கற்கைத் தேவைகளைப் பெற்றுக் கொள்ளத் தேவையானவாறு மாதாந்த புலமைப் பரிசில் வழங்கப்படுகின்றது. இதற்கான நிதிப் பங்களிப்பை பாதுகாவளர்களான பெற்றோர் வழங்கின்றனர். 

 

2. பாடசாலைக்குச் செல்லாத பிள்ளைகளை பாடசாலைகளில் இணைத்தல்

சிறுவர்  உரிமைகள் சமவாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிரிவு 28 மற்றும் 29 ஆகியன சிறுவர்களின் கல்வி உரிமைகள் பற்றி நேரடியாகக் கலந்துரையாடுகின்றன. வயது 18 இற்குக் குறைவான ஒவ்வொரு பிள்ளையும் பாடசாலைக் கல்வியைப் பெறுவதில் ஈடுபடுவதற்கான உரிமையைக் கொண்டிருப்பதுடன், அதற்கு அரசினால் ஏற்பாடுகள்செய்யப்படல் வேண்டும். எனினும் பல்வேறு பொருளாதார அல்லது சமூகக் காரணிகளின் அடிப்படையில் ஒரு சில பிள்ளைகளுக்கு தொடர்ச்சியாக பாடசாலைக் கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்புக் கிடைப்பதில்லை. எனவே இவ்வாறான பிள்ளைகளை மீண்டும் பாடசாலைமயப்படுத்துவதற்கு நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம் பாடசாலைக்குச் செல்லாத பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்களைப் பெற்றுக் கொடுத்து அவர்களை மீண்டும் பாடசாலைமயப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றது. 

நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்தினால் இலங்கைச் சிறுவர்களின் கல்வி உரிமையை உறுதி செய்வதன் மூலம் நன்னெறிமிக்க சிறுவர் சமுதாயத்தை உருவாக்குவது இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும். இதன் போது 2 அணுகுமுறைகளின் கீழ் பிள்ளைகளுக்கு உதவிகள் வழங்கப்படுகின்றன. அதாவது,

  • பாடசாலைக் கல்வியைப் பெறுகின்ற வயதிலுள்ள போதிலும் பொருளாதார அசௌகரியஙக்ள் காரணமாக இடைநடுவில் கல்வியை கைவிட்டுள்ள அல்லது கைவிடப்படக்கூடிய வாய்ப்புள்ள பிள்ளைகள்.
  • பல்வேறு காரணங்களினால் விட்டு விட்டுப் பாடசாலைக்குச் செல்லும் பிள்ளைகள். 

பாடசாலைக்குச் செல்லாத பிள்ளைகளை பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்தில் இனங்கண்டு அவர்கள் பாடசாலைக்குச் செல்லாமைக்கானர காரணங்களை தேடிப்பார்த்து அதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு அவர்களை பாடசாலைமயப்படுத்துவதும், கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ள தோட்டப்புற சிறுவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக கற்கை உபகரணங்களைப் பெற்றுக் கொடுப்பதும் இதன் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்த நிகழ்ச்சித்திட்டம் பல்வேறு கட்டங்களாக அமுல்படுத்தப்பட்டது.

  • பாடசாலை உபகரணங்களைப் பெற்றுக் கொடுத்து அவர்களை வலுவூட்டல். 
  • கல்வியை பெற்றுக் கொடுப்பதன் முக்கியத்துவம் பற்றி சிறுவர்கள், ஆசிரியர்கள், பெற்றோரை விழிப்புணர்வூட்டுவதற்கான நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்தல்.
  • அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், அலுவலர்களுக்கு மத்தியில் சிறுவர்களுக்கு நன்மையளிக்கும் வகையில் நல்லதொரு ஒருங்கிணைப்பைக் கட்டியெழுப்பல்.

பிரதேச செயலகங்களுக்கு இணைப்புச் செய்யப்பட்டுள்ள சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு அலுவலர்கள் ஊடாக இந்த நிகழ்ச்சித்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டன.  

 

3. கெப்பகரு பெற்றோர் பாதுகாவலர் திட்டம்

தொடர்ந்தும் சிறுவர்களின் கல்வித் தேவைகளுக்கு உத்துழைப்பு வழங்குகின்ற நிகழ்ச்சித்திட்டமாக கெப்பகரு பெற்றோர் பாதுகாவளர் நிகழ்ச்சித்திட்டத்தை அறிமுகம் செய்ய முடியும். இது மாதாந்தம் வழங்கப்படுகின்ற கல்விப் புலமைப் பரிசில் திட்டமாக செயற்படுத்தப்பட்டுள்ளது. விசேட கல்விசார் திறமைகளைக் கொண்டுள்ள பொருளாதார ரீதியில் பின்தங்கிய நிலையில் வாழ்ந்து வருகின்ற பாடசாலை மாணவர்கள் இதன் இலக்குக் குழுக்களாவார்கள். இவர்களிலிருந்து பொருத்தமானவர்களை தெரிவு செய்து அனுப்புவதை சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு அலுவலர்கள் மேற்கொள்வார்கள். மாதாந்தம் ரூபா 500/- அல்லது ரூபா 750/- இனை ஒரு சிறுவனுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

 

4. நெனதிறிய கல்விப் புலமைப் பரிசில் திட்டம்

பல்வேறு காரணங்களின் அடிப்படையில் கல்வியை இழக்கும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள சிறுவர்களுக்கு இந்தத் திணைக்களத்தின் முகாமைத்துவ சபையினால் நெனதிறிய நிகழ்ச்சித்திட்டம் மூலம் தனியார் துறையின் நிதி உதவியுடன் மாதாந்தம் புலமைப் பரிசில் வழங்கப்படுகின்றது. இந்த நிகழ்ச்சித்திட்டம் செவண சரண கெப்பகரு பெற்றோர் பாதுகாவளர் திட்டத்தின் கீழ் உப கருத்திட்டமொன்றாக அமுல்படுத்தப்படுகின்றது. இதன் மூலம் ஒரு சிறுவனுக்கு 1000 ரூபா முதல் 2000 ரூபா வரையான உதவித் தொகை வழங்கப்படுவதுடன், இத்தொகை அனுசரணையாளரின் விருப்பத்திற்கு அமைய வழங்கப்படுகின்றது. 

 

5. இரட்டைக் குழந்தைகளுக்கான உதவி

குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களிலுள்ள இரட்டைக் குழுந்தைகளின் சுகாதாரம், போசனை, ஏனைய நலன்புரி நடவடிக்கைகளுக்கும், மேற்படி சிறுவர்களை அச்சுறுத்தலான நிலைமைகளிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்குமாக வழங்கப்படுகின்ற உதவித்திட்டமொன்றாகும். பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்தில் கிடைக்கின்ற விண்ணப்பப் படிவங்களுக்குத் தேவையான நிதி உதவிகள் இதன் மூலம் பெற்றுக் கொடுக்கப்படும்.  

இதன் கீழ் இரண்டு குழந்தைகளுக்கு ரூபா 7,500/- ck;> உம், மூன்று குழந்தைகளுக்கு ரூபா 15,000/- உம், நான்கு குழந்தைகளுக்கு ரூபா 20,000/- உம், ஐந்து குழந்தைகளுக்கு ரூபா 25,000/- உம் செலுத்தப்படும். 

ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் ஒரு தடவை மாத்திரம் இந்த உதவித்திட்டத்தின் கீழ் பயன்களைப் பெற்றுக் கொள்ள முடியும். அதற்கமைய ஒரு வருடத்திற்கு 500 குடும்பங்களுக்கும் மேற்பட்டவர்களுக்கு இதன் மூலம் நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கும் வாய்ப்புக்கள் உருவாகியுள்ளன. 

 

6. மருத்துவ உதவி 

குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களிலுள்ள சிறுவர்களின் சுகாதார, போசனைச் சிக்கல்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இந்த உதவித்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வலது குறைந்த சிறுவர்களுக்கும் இதன் மூலம் உதவி வழங்கப்படுகின்றது. அவ்வாறே வலதுகுறைந்த சிறுவர்களுக்கும் இதன் கீழ் உதவி வழங்கப்படுகின்றது. பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்தில் கிடைக்கின்ற விண்ணப்பங்களுக்கு அமைய தேவையான நிதி பெற்றுக் கொடுக்கப்படுகின்றது. 

இதன் கீழ் மருத்துவ சிகிச்சை, சத்திர சிகிச்சை, போசனை நடவடிக்கைகள், உடல் ரீதியான பலவீனங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் உபகரணங்களுக்கும் உதவி வழங்கப்படுகின்றது. சிகிச்சை, போசனை நடவடிக்கைகளுக்காக ரூபா 5,000/- ஆன தொகையும், சத்திர சிகிச்சைகளுக்காக ரூபா 10,000/- ஆன தொகையும், உபகரணங்களுக்காக அவற்றின் விலைகளுக்கு அமைய பல்வேறு தொகைகளும் செலுத்தப்படுகின்றது. இந்தக் கொடுப்பனவுத் தொகைகள் அக்குழந்தைகளின் குடும்பங்களது பல்வேறு நிலைமைகள், அவர்கள் எதிர்நோக்கியுள்ள அசௌகரிங்களின் அடிப்படையில் மாற்றமடைய முடியும்.     

ஒவ்வொரு விண்ணப்பதாரரும் ஒரு தடவை மாத்திரம் இந்த உதவித்திட்டத்தின் கீழ் பயன்களைப் பெற்றுக் கொள்ள முடியும். அதற்கமைய வருடாந்தம் சுமார் 500 குடும்பங்களுக்கு இதன் மூலம் நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.  

 

7. திடீர் அனர்த்த உதவி

திடீரென ஏற்படுகின்ற அனர்த்தங்களினால் பாதிக்கப்படுகின்ற குடும்பங்களின் அநாதரவான சிறுவர்களின் கல்வி நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கு வழங்கப்படுகின்ற உதவித் திட்டமொன்றாகும். திடீரென சூழலில் ஏற்படுகின்ற வெள்ளம், சூறாவளி, மண்சரிவு, வீடுகள் தீயில் எரிதல் போன்ற நிலைமைகளினால் கஷ்டங்களை எதிர்நோக்குகின்ற சிறுவர்களுக்கான நலன்புரி நடவடிக்கைகள் இதன் மூலம் செய்து கொடுக்கப்படும். அத்துடன் குடும்பங்களில் பெற்றோர் உயிரிழத்தல், சிறுவர்களை கைவிட்டுச் செல்லல், பெற்றோர் திடீர் விபத்துக்களுக்கும், நோய்களுக்கும் ஆளாகுதல், வெளிநாடு சென்றவர்கள் திரும்பி வராமை, சிறுவர்கள் தற்காலிக பாதுகாவளர்களின் பொறுப்பின் கீழ் கொண்டுவரப்படுதல், குறித்த பாதுகாவளர்கள் உடல், உள ரீதியில் பலவீனமானவர்களாக இருத்தல் போன்ற காரணங்களினால் அநாதரவான நிலைக்குத் தள்ளப்படுகின்ற சிறுவர்களுக்கு உதவுவதற்கும் இந்த உதவித் திட்டத்தின் கீழ் வசதி செய்யப்படும். 

யாதாயினுமொரு அனர்த்த நிலைமையின் போது சிறுவர்களின் பாடசாலை உபகரணங்கள் சேதமடைந்திருப்பின் அதற்குப் பதிலாக ஒரு குடும்பத்திற்கு ரூபா 5000/- ஆன உதவித் தொகை வழங்கப்படும். அவ்வாறாயினும், அவ்வவ் சந்தர்ப்பங்களில் ஏற்படுகின்ற இழப்புக்களின் தீவிரத்தன்மையின் அடிப்படையில் வழங்கப்படுகின்ற உதவித் தொகை மாற்றமடைய முடியும். யாதாயினுமொரு அனர்த்த நிலைமையின் போது சிறுவர்களின் கல்வி நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு உதவியளிப்பது இதன் பிரதான நோக்கமாகும். பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்தில் கிடைக்கும் விண்ணப்பங்களுக்கு அமைய தேவையான நிதிஉதவி பெற்றுக் கொடுக்கப்படும். 

 

8. செனஹச சேமிப்புக் கணக்கு

சுனாமி அனர்த்தத்தினால் பெற்றோர் இரண்டு பேரையும் இழந்துள்ள 18 வயதுக்குக் குறைவான சிறுவர்களுக்காக அமுல்படுத்தப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டமாகும். 2006 ஆம் ஆண்டு இந்த நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதுடன், அதன் போது சிறுவர்கள் 689 பேர் இதில் உள்ளடக்கப்பட்டார்கள். 2015 டிசம்பர் மாதமளவில் இதிலிருந்த சிறுவர்களின் எண்ணிக்கை 98 பேராகும். ஒவ்வொரு மாதமும் 18 வயதைப் பூர்த்தி செய்கின்ற சிறுவர்கள் இந்த நிகழ்ச்சித்திட்டத்திலிருந்து நீக்கப்படுகின்றார்கள்.  

இந்தத் திணைக்களம், மக்கள் வங்கியின் தலைமை அலுவலகத்துடன் இணைந்து இந்த நிகழ்ச்சித்திட்டத்தை அமுல்படுத்துகின்றது. ஒவ்வொரு மாதமும் குறித்த சிறுவர்களுக்காக இந்தத் திணைக்களத்தினால் மக்கள் வங்கிக்கு (காசோலை மூலம்) பணம் அனுப்பப்படுகின்றது. 

18 வயது பூர்த்தியடைகின்ற சிறுவர்கள் தொடர்பாக மக்கள் வங்கி மூலம் திணைக்களத்திற்கு மாதாந்தம் அறிவிக்கப்படுவதுடன், குறித்த சிறுவர்களுக்கு உரிய நிதியை அனுப்பிய பின்னர் மக்கள் வங்கி அது பற்றிய தகவல்களை திணைக்களத்திற்கு அறியத்தரும்.

 

Follow-up process: - The follow up process of all these beneficiary children are being closely and continuously conducted by the child rights promotion officers attached to the divisional secretariat offices.

Note: Relevant application forms for this are included in the downloads.

 




எம்முடன் இணைந்துகொள்ளுங்கள்

எம்மைத் தொடர்புகொள்ள

  • நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம்,
  • 3 ஆம் மாடி, செத்சிறிபாய, இரண்டாம் கட்டம்,
  • பத்தரமுல்லை.
  • +94 11 2186 062/ 11 3082 483
  • +94 11 218 7285
  • pcc@sltnet.lk