நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம்

மகளிர்இ சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சுகற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுல்படுத்தல். 

கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் செய்யப்பட்டுள்ள சிபாரிசுகளை அமுல்படுத்துவதற்காக தோட்டத்துறையில் வாழும் தமிழ் வம்சாவளி மக்களின் பிள்ளைகள் மற்றும் நீண்டகாலமாக யுத்த சூழல் காரணமாக இடம்பெயர்ந்துள்ள பிள்ளைகளை இலக்காகக் கொண்டு இந்த நிகழ்ச்சித்திட்டம் அமுல்படுத்தப்பட்டது. இந்தப் பிரதேசங்களில் வாழும் பிள்ளைகளின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்து, பாதுகாப்பான சிறுவர் பராயத்தை உருவாக்கிக் கொடுப்பது இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் பிரதான நோக்கமாகும். பிள்ளைகளுக்கு வசதிகளைச் செய்துகொடுப்பது மற்றும் அவர்களுக்கென 'சத்துட்டு' நிலையங்களைத் தாபித்தல், சித்திரக் கலை, சங்கீதம் மற்றும் விளையாட்டுப் போட்டிகளை நடாத்தல் ஆகியன இதன் செயற்பாடுகளாகும். பிரதேச செயலாளர் பிரிவுகளிடமிருந்து கிடைக்கின்ற கோரிக்கைகளுக்கு அமைய ஏற்பாடுகள் வழங்கப்பட்டன.


யுத்தத்துடன் நேரடியாகச் சம்பந்தப்பட்டவர்களை விழிப்புணர்வூட்டுவதற்காக மாவட்ட செயலாளர் பிரிவு மட்டத்தில் மற்றும் பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்தில் நிகழ்ச்சித்திட்டங்கள் ஒழுங்குசெய்யப்படுகின்றன. வீடுகளிலிருந்து வெளியேறிச் செயற்படுகின்ற சந்தர்ப்பங்களில் பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் அறிவு, திறமையை வளர்க்கத் தேவையான வசதிகள் செய்துகொடுக்கப்படும். இதன் போது நூலகங்கள் மற்றும் வெளி விளையாட்டுச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற வாய்ப்பும் இவர்களுக்குக் கிடைக்கும்.

 
எம்முடன் இணைந்துகொள்ளுங்கள்

எம்மைத் தொடர்புகொள்ள

  • நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம்,
  • 3 ஆம் மாடி, செத்சிறிபாய, இரண்டாம் கட்டம்,
  • பத்தரமுல்லை.
  • +94 11 2186 062/ 11 3082 483
  • +94 11 218 7285
  • pcc@sltnet.lk